• Jan 01 2025

அம்பானி வீட்டில் மட்டும் குத்தாட்டம் போட்ட ரஜினி! அதற்கான காரணத்தை உடைத்த பிரபலம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

உலக பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன்  ஆனந்த் அம்பானிக்கு தற்போது தடபுடலாக திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனந்த் அம்பானி  ராதிகா மெர்ச்சன்ட்  என்பவரை காதலித்தார். அவரும் மும்பையைச் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டுப் பெண். மருத்துவத் துறையில் பணியாற்றுகின்றார். இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டார்களும் சம்மதித்து திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இவர்களுடைய ப்ரீ வெடிங் நிகழ்வுகள் அண்மையில் கொண்டாடப்பட்டது. அதற்கு சொகுசு கப்பல் புக் பண்ணப்பட்டதோடு அதை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டனர். இதில் பல பிரபலங்கள் பங்கேற்றதோடு தமிழ் சினிமாவில் இருந்து ரஜினியின் குடும்பமும் பங்கேற்று இருந்தது.

பாலிவுட் திரையுலகமே ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளதோடு அவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார் முகேஷ் அம்பானி.

குறித்த நிகழ்ச்சியில் பல விடயங்கள் பேசு பொருளாக காணப்பட்டதோடு, அதில் ரஜினி போட்ட குத்தாட்டமும் ஒன்று. பொதுவாக வேறு சென்றால் அமைதியாக இருக்கும் ரஜினிகாந்த் அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ, புகைப்படங்களும் வைரல் ஆகின.


இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்த விவகாரம் குறித்து கூறுகையில், அம்பானி வீட்டு கல்யாணம் பிரபாண்டமாக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். ரஜினிகாந்த் ஆடிய நடனம் விமர்சனத்தை சந்தித்தது. பணக்கார வீட்டு கல்யாணம் என்பதால்தான் ரஜினி இப்படி நடந்து கொண்டார் என்று கூறுகின்றார்கள்.

ஆனால் அதில் உண்மை இல்லை. முகேஷ் அம்பானி ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். சில காலத்துக்கு முன்பு முகேஷ் அம்பானியின் மனைவி மும்பையில் ஒரு கலாச்சார  மையத்தை தொடங்கினார். அந்த தொடக்க விழாவுக்கு  உலக அளவில் இருந்து விஐபிகள் வந்தார்கள். தென்னிந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஒரு பிரபலம் என்றால் அது ரஜினி மட்டும்தான்.  

ரஜினிக்கு அந்த விழாவில் நான்காவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. அவருக்கு பக்கத்தில் ஒரு இடம்  காலியாக இருந்தது. அங்கு வந்த முகேஷ் அம்பானி வேறு யாரு பக்கத்திலும் சென்று அமராமல் நேரே ரஜினி அருகே வந்து அமர்ந்தார். அந்த அளவுக்கு ரஜினி மீது அன்பு அதிகம். அந்த அன்பின் வெளிப்பாடு தான் ரஜினி போட்ட குத்தாட்டம் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement