• Dec 29 2024

கோட் டி-சர்ட்டை அணிந்து மாஸ் காட்டிய பிரேம்ஜி..! இலங்கையில் இருந்து லீக்கான போட்டோ

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் பிரேம்ஜி, வைபப் உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள்.

நடிகர் விஜய் அப்பா மகன் என்ற இரு வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கோட் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றதாம். மேலும் விஜய், பிரபுதேவாவின் இறுதிக்கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையி,ல் சமீபத்தில் திருமணம் முடித்த பிரேம்ஜி, இலங்கையின் கொழும்புவில் இருந்து ஒரு புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

அதில் விஜய்யின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் கூடிய டி-ஷர்டை அவர் அணிந்துள்ளார். மேலும் அதில் கோட் படத்தின் அப்பா  விஜய் மற்றும் மகன் விஜய் என இருவரும் காணப்படுகின்றனர். இந்த டி-ஷர்ட்டை அணிந்துக் கொண்டு பிரேம்ஜி தனக்கே உரிய ஸ்டைலில் போஸ்ட் கொடுத்துள்ளார். குறித்த போட்டோ தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement