• Dec 26 2024

மகள் வாழ்க்கையை நினைத்து வருந்தும் ரஜினிகாந்த்.. மனமாற்றத்திற்காக கொடுத்த ரூ.100 கோடி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழும் நிலையில் அவர்களை எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் என்று ரஜினி தீவிர முயற்சி செய்ததாகவும் ஆனால் இரு தரப்பிலும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் ரஜினிகாந்த் மிகுந்த மன வருத்தம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தது ரஜினியை ரொம்பவே மன வருத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும் மகளின் வாழ்க்கையை நினைத்து அவர் சோகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகளின் மனமாற்றத்திற்காக அவர் அதிரடி முடிவு எடுத்திருப்பதாகவும் மகள் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் பிரிவு அவரை எந்த விதத்திலும் மன வருத்தத்தை உண்டாக்கி கூட விடக்கூடாது என்பதற்காக தீவிரமாக அவரை சினிமாவில் கவனம் செலுத்த ஆலோசனை கூறியதாகவும் ஐஸ்வர்யா இயக்கும் அடுத்த படத்திற்கு தானே கால்ஷீட் தருவதாக சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தை யாரும் தயாரிக்க முன் வரவில்லை என்றால் நாமே தயாரிக்கலாம் என்றும் அதற்காக 100 கோடி ரூபாய் செலவு செய்தால் கூட பரவாயில்லை என்று அவர் நம்பிக்கை கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து உற்சாகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஒரு கதை எழுதி வருவதாகவும், ஏற்கனவே இந்த படத்தில் சித்தார்த் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து ரஜினியும் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் ’லால் சலாம்’ தோல்வியை மறக்கடித்து தன்னை ஒரு வெற்றிப்பட இயக்குனராக நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவர் தீவிரமாக கதை தயாரிக்கும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement