• Dec 26 2024

தங்கமயில் கல்யாணத்திற்கு வந்த திடீர் சிக்கல்.. சாயம் வெளுத்து போனதால் பாக்கியம் அதிர்ச்சி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் பாண்டியன் தனது வீட்டின் கல்யாணத்தை குறித்து பெருமையாக எதிர் வீட்டுக்காரர்கள் காதில் கேட்கும் படி சத்தமாக பேசும் காட்சியும், இதனால் முத்துவேல் - சக்திவேல் குடும்பத்தினர் ஆத்திரமடையும் காட்சியும் உள்ளன. இதனை அடுத்து தங்கமயில் வீட்டில் அவருடைய அப்பா திருமணத்திற்கான பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் இருப்பதும் அவரை பாக்கியம் திட்டுவதுமான காட்சிகள் உள்ளன. அதன் பின்னர் பெண்ணை அழைக்க பாண்டியன் குடும்பத்தினர் பெண் வீட்டிற்கு செல்லும் நிலையில் அங்கு திடீரென கடன்காரர்கள் தங்கமயில் வீட்டு வாசலில் நின்று சத்தம் போட்டுக் கொண்டிருப்பதால் இந்த கல்யாணத்திற்கு சிக்கல் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் தனது மகன் சரவணன் திருமணம் குறித்து கல்யாணத்திற்கு வந்த விருந்தினர்களிடம் அட்ராசிட்டியாக பேசும் காட்சிகள் உள்ளன. வேண்டுமென்றே அவர் சத்தம் போட்டு எதிர் வீட்டில் உள்ள முத்துவேல் - சக்திவேல் குடும்பத்திற்கு கேட்கும் படி தனது வீட்டின் திருமணம் குறித்து பெருமையாக பேசுவதை அறிந்து முத்துவேல் - சக்திவேல் மற்றும் அவருடைய மகன் ஆத்திரம் அடைகின்றனர். எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.



இந்த நிலையில் திருமண செலவுக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு பணம் கொடுக்க ஏற்பாடு   முடியாமல் பாக்கியம் கணவர் திகைத்து நிற்க அவரை பாக்கியம் திட்டும் காட்சிகள் உள்ளன. அதனை அடுத்து வேறொருவர் கொடுத்து வைத்த பணம் இருப்பதால் அந்த பணத்தை வைத்து இப்போதைக்கு சமாளித்துக் கொள்ளலாம் என்று பாக்கியம் ஐடியா கொடுக்க வேறு வழியின்றி அவருடைய கணவரும் ஒப்புக்கொள்கிறார்.

இந்த நிலையில் கோமதி, பெண்ணை அழைத்து வரலாம் என்று கூற அவரது குடும்பத்தில் இருந்து சிலர் தங்கமயிலை அழைத்து வரக் கிளம்புகின்றனர். இந்த நிலையில் தான் திடீரென கடன்காரர்கள் பாக்கியம் வீட்டு வாசலில் நின்று சத்தம் போடுகின்றனர். மகளுக்கு 80 பவுன் நகை போட பணம் இருக்கிறது, பிரமாண்டமாக கல்யாணம் நடத்த பணம் இருக்கிறது, வாங்கிய கடனை கொடுக்க பணம் இல்லையா என்று மானத்தை வாங்கும் காட்சிகளை அடுத்து தங்கமயில் திருமணம் நின்று விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்தவர்களும் தங்கமயில் குடும்பத்தினரை கடன்காரர் குடும்பம் என்று அவமரியாதையாக பேசும் காட்சி உடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement