• Dec 26 2024

காவேரி ஆஸ்பிட்டல் கமல் வீட்டுக்கு பக்கத்துல இருக்குது: கமலை கிண்டல் செய்கிறாரா ரஜினி?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட நிலையில் அவர் கமல்ஹாசன் குறித்து பேசியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது, ‘நான் 25 வருடமாக எந்த கல்லூரி மற்றும் கட்டிட திறப்பு விழாவிலும் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னை அவர்கள் அழைத்த போது என்னால் மறக்க முடியவில்லை.

எனக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மேல் மிகுந்த மரியாதை உண்டு. இந்த உடம்பு அமெரிக்க மருத்துவமனைக்கு எல்லாம் சென்று வந்துள்ளது, நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு மருத்துவர்கள், செவிலியர் தான் காரணம் என்று பேசினார்.

இந்த கட்டிடம் உள்ள பகுதியில் தான் விசு அவர்களின் ’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது அந்த படம் முதலீட்டை விட பல மடங்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது, அப்படி ஒரு ராசியான இடத்தில் தான் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது என்றும் கூறினார்.

நான் ஒரு முறை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எனக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் செய்தார்கள், ஆபரேஷன் சக்சஸ் என்று கூறிய போது எனக்கு மனம் நிம்மதியாக இருந்தது. அங்கே பணிபுரிந்த செவிலியர்கள், பணியாட்கள் எல்லாருமே எனக்கு பாசிட்டிவிட்டி கொடுத்தார்கள் என்று கூறினார்.

இதனை அடுத்து அவர் பேசியது தான் சர்ச்சைக்கு உள்ளானது. முன்பெல்லாம் காவேரி மருத்துவமனை எங்கு இருக்கிறது என்று கேட்டால் கமல்ஹாசன் வீடு அருகில் இருக்கிறது என்று கூறுவார்கள், ஆனால் இப்போது கமல்ஹாசன் வீடு எங்கே என்று கேட்டால் காவிரி மருத்துவமனை அருகில் இருக்கு என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு காவேரி மருத்துவமனை புகழ்பெற்றுள்ளது’ என்று கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சு கமல்ஹாசனை இழிவுபடுத்துவதாக கமல் ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் ரஜினி ரசிகர்களும் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement