• Apr 18 2026

வண்ண நிலவே பாடலில் ரம்பா நடிக்கவே இல்லையா, அது யாருடைய தொடை தெரியுமா?- உண்மையை உடைத்த இயக்குநர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த முக்கிய திரைப்படம் தான் நினைத்தேன் வந்தாய். இயக்குநர் செல்வ பாரதி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாயகியாக ரம்பா நடித்திருந்தார்.இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேவரிட் எனலாம்.

இப்படத்தில் இடம்பெற்ற"வண்ண நிலவே" பாடல் இன்று வரை பல விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாகவே உள்ளது. இந்நிலையில், அந்த பாடலில் பல காட்சிகளில் ரம்பா நடிக்கவே இல்லை என  இயக்குநர் செல்வ பாரதி ஷாக் கொடுத்துள்ளார்.


அவர் அளித்த பேட்டியில் நினைத்தேன் வந்தாய் படத்தில் கடைசியாகத்தான் அந்த "வண்ண நிலவே" பாடலை படமாக்கினேன். அதற்குள் ரம்பா இன்னொரு படத்தில் கமிட் ஆகி அங்கே நடிக்க போயிட்டா, முதல் பட இயக்குநர் என்பதால், நான் கூப்பிட்டும் அவர் வரவில்லை. அதனால் எனக்கு ரொம்ப டென்ஷனாகி விட்டது. 

உடனே ரம்பாவோட டிரெஸ்ஸை மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க என சொல்லிட்டு, அங்கே இருந்த ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை வைத்து தான் அந்த பாடலின் பல காட்சிகளை எடுத்தேன் எனக் கூறியுள்ளார்.

 அதிலும், ஒன்று இரண்டல்ல ஒட்டுமொத்தமாக 45 ஷாட்கள் ரம்பா இல்லாமலே அந்த பாடலை படமாக்கினேன் என்றும் இதுவரை அந்த ரகசியத்தை எங்கேயும் சொல்லவில்லை என இயக்குநர் செல்வ பாரதி சமீபத்திய பேட்டியில் சொல்லி உள்ளார்.

அந்த பாடலில் ரம்பாவின் முகத்தை காட்டவில்லை என்றாலும் அந்த தொடையழகை பார்த்து இத்தனை நாள் ஜொள்ளு விட்டது எல்லாம் வீணாப்போச்சே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement