விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் ரவீனா தாஹா. இவர் நடித்த சீரியல்களுள் மௌன ராகம் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7ல் பங்கு பற்றி இருந்தார் ரவீனா தாஹா. இதில் சிறப்பாக விளையாடி வந்த போதிலும் அந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட மணிகண்டனுடன் காதலில் விழுந்தார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு இவர்களுடைய காதலும் பிரிந்தது.
வெள்ளித்திரை வாய்ப்புக்காக காத்திருந்த ரவீனாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதன் பின்பு மீண்டும் சீரியலில் நடிப்பதற்காக களமிறங்கினார்.
d_i_a
அந்த வகையில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் என்ற சீரியலில் கதாநாயகியாக ரவீனா நடித்துள்ள ப்ரோமோக்கள் எல்லாம் வெளியானது.
இந்த நிலையில், சிந்து பைரவி சீரியல் ஆரம்பிக்கப்படும் முன்பே ரவீனா தாஹா அதிலிருந்து விலகி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இரண்டு நண்பிகளின் ஒற்றுமை மற்றும் ஏட்டிக்கு போட்டியான இரண்டு ஜோடிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக களமிறங்கிய ரவீனா தாஹா பின் வாங்கியுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசல் படி சீரியலில் வில்லியாக காணப்படும் ஆர்த்தி சுபாஷ் அவருக்கு பதிலாக இந்த சீரியலில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!