• Dec 26 2024

மனோஜின் தில்லாலங்கடி வேலையை பார்த்த ரோகினி, மழுப்ப முடியாமல் தவிக்கும் விஜயா- கலாய்த்துத் தள்ளிய ஸ்ருதி-Siragadikka Aasai Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதனைப் பார்ப்போம்.

மனோஜ் பார்க்கில் செய்யும் சேட்டைகள் எல்லாவற்றையும் வீடியோ எடுத்த முத்து அவசரம் அவசரமாக வீட்டுக்கு வந்து அண்ணாமலை விஜயா எல்லோரையும் கூப்பிடுகின்றார். அப்போது மீனாவிடம் ரோகினி தான் முக்கியமாக நிற்கனும் அவங்களைக் கூட்டிட்டு வா என்று சொல்ல மீனாவும் கூட்டிட்டு வருகின்றார்.


ரோகினி வந்ததும்,அண்ணாமலை எதுக்கு இப்போ எல்லோரையும் கூப்பிடுற என்று சொல்ல முத்து, உங்களுக்கு ஒரு குறும்படம் போட்டுக்காட்டப் போறேன். இந்த மனோஜ் வேலைக்கு போறன் என்று பார்க்கில ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கிறான் என்று சொல்ல, ரோகினி மனோஜ் பற்றி தப்பாப் பேசாதீங்க என்று சொல்லி விட்டு உள்ளே போகின்றார்.

அப்போது முத்து படத்தை பார்க்காமல் போனால் எப்படி என்று கேட்டு விட்டு மனோஜ் பார்க்கில் கதைத்துவிட்டு சாப்பிட்டு துாங்கும் வீடியோவைப் போட்டுக் காட்டுகின்றார்.இதைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். பின்னர் அந்த பார்க்க செக்யூரிட்டி மனோஜ் ரெண்டு மூன்று மாசமாக இங்க தான் வந்து போறாங்க என்றும் சொல்கின்றார்.


அத்தோடு மனோஜின் ஷோ ரூமிலும் விசாரிச்ச ஆடிாவையும் போட்டுக் காட்ட விஜயாவும் என்ன சொல்லுவதென்று தெரியாமல் குழப்பத்தில் நிற்கின்றார். மேலும் ஸ்ருதியும் ரோகினியை கலாய்க்கின்றார்.தொடர்ந்து வீட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் மனோஜ் வீட்டுக்கு வருகின்றார். வந்ததும் தன்னுடைய ஷோ ரூமுக்கு விஜய் வந்ததாக பொய் சொல்கின்றார். 


இதைக் கேட்ட முத்து உங்களோட ஷோ ரூமுக்கு விஜய் வந்தாரா என்று நக்கலாகக் கேட்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement