• Dec 27 2024

பிறந்த நாளை கூட பிகினியில் கொண்டாடிய சாக்சி அகர்வால்.. பீச் பேபி புகைப்படங்கள் வைரல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை சாக்சி அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பிறந்த நாளை கூட பீச்சில் பிகினி அணிந்து கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் சில திரைப்படங்களில் நடித்துள்ள சாக்சி அகர்வால், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அதன் பிறகுதான் அவர் பிரபலமானார் என்பது தெரிந்தது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாக்சி அகர்வால், கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்யும் போது அவரது ஃபாலோயர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சி ஏற்படும். அந்த அளவுக்கு அவர் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துவார்.

இந்த நிலையில் சாக்சி அகர்வால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் பீச்சில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு, பாசம் அனைத்தும் என்னை மகிழ்ச்சிப்படுத்தியது. உங்கள் அன்பால் நான் பெருமைப்படுகிறேன். இந்த வருடம் நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒன்றாக ஆடிக்கொண்டே இருப்போம்’ என்று பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement