• Dec 26 2024

அஜித், விஜய் படம் மட்டும் தான் ரீரிலீஸ் ஆகுமா? சமந்தா படத்தின் ரீரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றி பெற்ற பழைய திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் அதில் சில படங்கள் நல்ல வசூலையும் சில படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாமலும் உள்ளன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் புதிய திரைப்படங்களுக்கு இணையாக மிகப்பெரிய வசூலை பெற்று சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்கள் ரீரிலீஸ் ஆகி வரும் நிலையில் சமந்தாவின் திரைப்படம் ஒன்று ஆகஸ்ட் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.



கௌதம் மேனன் இயக்கத்தில் தெலுங்கில் நானி, சமந்தா நடித்த ’ஏதோ வெள்ளிப்போயிந்தி மனசு’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரீரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படம் தமிழில் ’நீதானா என் பொன்வசந்தம்’ என்ற பெயரில் உருவானது என்பதும் தமிழில் ஜீவா மற்றும் சமந்தா நடித்திருந்தனர் என்பதும், இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் இந்த படம் ரீரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement