• Dec 27 2024

ஒரே நேரத்தில் அஜித், விஜய் படங்களில் கமிட் ஆகும் தமன்னா? குத்துப்பாட்டு ராசியா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

இப்போதெல்லாம் தமன்னா ராசியான நடிகை ஆகிவிட்டார் என்பதும் அவர் ஒரு படத்தில் நடித்தாலோ அல்லது குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினாலோ, அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று திரையுலகினர் நம்ப தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ’காவாலா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடிய தமன்னா, ‘அரண்மனை 4’ திரைப்படத்திலும் கிளாமர் நடனமாடிய நிலையில் அந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமன்னாவின் குத்துப்பாட்டு ராசி காரணமாக ஒரே நேரத்தில் அவர் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரது படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது



அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும்,  விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ படத்திலும் தமன்னா இணைய இருப்பதாகவும் ஆனால் இந்த இரு படங்களில் அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறாரா? அல்லது நாயகி அல்லது வேறு கேரக்டரில் நடிக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை. ஏற்கனவே அஜித்துடன் ’வீரம்’ படத்திலும், விஜய்யுடன் ’சுறா’ படத்திலும் நடித்துள்ள தமன்னா மீண்டும் இருவரது படங்களில் நடிப்பாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அது மட்டுமின்றி தெலுங்கு மாற்றும் பாலிவுட் படங்களிலும் ஒரு பாடலுக்கு நடனமாட தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவே மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement