• Dec 26 2024

எமனுக்கே டாட்டா காட்டிய சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப நீளுதே..!!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் சமந்தா. இவர் த்ரிஷா, நயன்தாராவுக்கு இணையாக நடித்து வருகிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வரும் இவர், பிசினஸும் ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகிறார்.

2017 ஆம் ஆண்டில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று அவரை பிரிந்து விட்டார். ஆனாலும் அவர்கள் தற்போது நண்பர்களாக இருப்பதாக பேட்டியில் தெரிவித்து இருந்தார்கள்.


அதற்குப் பின் தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவுக்கு, மயோசிடிஸ் நோய் ஏற்படவே மிகவும் கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் தனது 37வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளது.


அதன்படி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஐதராபாத்தில் உள்ள பங்களாவின் மதிப்பு மட்டும் ரூ.7 கோடிக்கு மேல் இருக்குமாம். 

அதுமட்டுமின்றி சமந்தாவிடம் 2.26 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர், போர்ச், ஆடி, ஜாகுவார் போன்ற சொகுசு கார்களும் உள்ளதோடு, அவர்  சாஹி என்கிற ஆடை நிறுவனத்தை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement