• Dec 25 2024

'எனக்கு என் அப்பா தான் சாமி' வேறுவழியின்றி ரோட்டில் கிடந்த பிள்ளையாரிடம் கெஞ்சிக்கதறும் முத்து! Siragadikka Aasai Serial

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் வெளியாகியுள்ளது. 

அதன்படி இன்றைய எபிசோடில், அண்ணாமலைக்கு ஆபரேஷன் பண்ண பணம் வேணும் என்ற காரணத்தினால் பத்திரத்தை வைத்து பணத்தை ரெடி பண்ணலாம் என முத்து வீட்டிற்கு விரைகிறார். எனினும் வீட்டில் பத்திரம் இல்லை. மீனாவுக்கு போன் பண்ணிய போதும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் மீனாவை தேடி அலைகிறார்

அதன் பிறகு பைனான்ஸியரிடம் சென்று 'அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ணனும் 4 லட்சம் பணம் கொடுங்க. பிறகு பத்திரத்த கொண்டு வாரன்' என்று முத்து சொல்ல, 'உன் குடும்பத்தில் இருக்கிற எல்லோரும் வந்தா தான் நான் பணம் தருவேன். திடீர்னு உங்க அப்பா செத்துட்டா நான் என்ன பண்றது' என பைனான்ஸியர் கேட்பதற்கு முதலே கோவத்தில் அவருடன் தகராறு பண்ணுகிறார்.


வேறு வழியின்றி ரோட்டோரத்தில் தன் காரை நிறுத்தி அங்கு குப்பையில் கிடந்த பிள்ளையாரை பார்த்து 'எனக்கு எங்க அப்பா எவ்வளவோ பண்ணி இருக்காரு இப்ப அவருக்கு உதவி பண்ண என்கிட்ட பணம் இல்ல' என புலம்புகிறார்.

அந்த நேரத்தில், மெக்கானிக் செட்டிலிருந்து முத்துவிற்கு போன் வருகிறது. அதில் 'உன்னோட கார் ரெடி ஆயிடுச்சு வந்து எடுத்துட்டு போ. புது கார் போல  ரெடி பண்ணி வச்சிருக்கன்.  ஒருத்தவங்க 4 லட்சத்துக்கு உன் காரை கேட்டாங்க' என்று சொல்ல, 'எனக்கு இப்ப அவசரமா நாலு லட்சம் பணம் வேணும் காரை வித்துடு' என்று சொல்லி காரை விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் அப்பாவுடைய ஆபரேஷனுக்கு கட்டுகிறார்.


எனினும், மீதமுள்ள செலவுக்கு மூன்று லட்சம் தேவைப்படும் என்று வளையல், செயின், மோதிரம் எல்லாத்தையும் கழட்டி அடகு வைக்குமாறு முத்துவுக்கு கொடுக்கிறார் விஜயா.

இன்னொரு பக்கம் சீதா ரவிக்கு போன் பண்ணி, உன்னால நாங்க எல்லோரும் கஷ்டப்படுறோம். எங்க அக்கா வீட்டுக்கு போக முடியாம எங்க வீட்டிலேயே இருக்காங்க. உங்க அப்பா ஹாஸ்பிடல்ல இருக்காரு. அவர கூட பாக்க விடல' என்று சொல்ல, ரவி 'அப்பாவுக்கு நெஞ்சுவலியா?' என அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து அப்பாவை பார்க்க உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கிளம்பிச் செல்கிறார். 

Advertisement

Advertisement