• Dec 26 2024

கூகுள் தேடல் ட்ரெண்டிங்கில் இருந்த பிரபல பாடகி​ திடீர் மரணம்! பேரிடியாய் விழுந்த தகவல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நாட்டுப்புற பாடல்களால் மக்களை பெரிதளவில் கவர்ந்தவர் தான் பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்ஹா. இவர் போஜ்புரியில் மட்டுமில்லாமல் மைதிலி, இந்தி உள்ளிட்ட  மொழிகளில் பல பாடல்களை பாடி பிரபலமாக காணப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு விருதுகளிலேயே உயரிய விருதாக கருதப்படும் பத்ம பூஷன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புகழின் உச்சியில் காணப்படும் பாடகி சாரதா சின்காவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

d_i_a"

இதைத்தொடர்ந்து அதற்கான சிகிச்சைகளையும் அவர் மேற்கொண்டு வந்தார். நேற்றைய தினம் கூகுள் தேடலில் டாப் ட்ரெண்டிங் டாபிக்காக  பாடகி சாரதா சின்ஹா காணப்பட்டுள்ளார். அதற்கு காரணம் அவர் உடல்நிலை சரியில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தான்.


இந்த நிலையில், பாடகி சாரதா சின்ஹாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

இதேவேளை பாடகி சாரதா சின்ஹாவின் மகன் நேற்றைய தினம், தனது அம்மா வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் மிக உருக்கமாக பேசியுள்ளார். தற்போது இவருடைய மரணம் பலருக்கும் பேரிடியாக விழுந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement