• Dec 27 2024

விஜயா விஷயத்தில் வசமாக சிக்கிய சத்யா? முத்து செய்த விபரீத செயல்! மீனாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், மீனா அண்ணாமலைக்கு டீ கொண்டு வந்து கொடுக்கும் போது பாட்டியும் கால் பண்ணுகிறார். இதன் போது பேசிய பாட்டி, வீட்டில் உள்ளோரை நலம் விசாரித்து விட்டு அண்ணாமலை பற்றி விசாரிக்க, வாய் தடுமாறிய மீனா அண்ணாமலை ஹாஸ்பிடல் போன விஷயத்தை கூற முனையவும், அண்ணாமலை அவரை பார்த்து சொல்ல வேண்டாம் என்று தடுக்கிறார்.

இதை தொடர்ந்து முத்து வீட்டிற்கு வர, யார் பாட்டியா? என்று  கேட்டு அவரும் கதைக்கும் போது அண்ணாமலை விஷயத்தை சொல்ல எடுக்க, அவரிடமும் வேண்டாம் என்று தடுக்கிறார் அண்ணாமலை.

இதை தொடர்ந்து, நீங்க வீட்ட வந்த போது எடுத்த குரூப் போட்டோவை அனுப்பிவிடு, நான் பிரேம் போட்டு எடுக்கிறேன் என பாட்டி சொல்ல, அதற்கு முத்து நானே பிரேம் பண்ணி அனுப்புறேன் என்று சொல்லுகிறார்.


இதைக் கேட்ட விஜயா, இங்கே இருக்க போட்டோ எல்லாம் போதாதா என்று பிரச்சனை பண்ண, அந்த போட்டோல நானும்  மீனாவும் இருக்கிறது தான் அவங்களுக்கு பிரச்சனை என்று முத்து சொல்கிறார்.

இதைத் தொடர்ந்து பாட்டிக்கு பிரேம் போட்டு கொடுப்பதற்காக பிரிண்ட் கடைக்கு செல்கிறார் முத்து. அங்கு போட்டோவில் விஜயாவை பார்த்த கடைக்காரர், கொஞ்ச நாளைக்கு முதல் விஜயாவிடம் இருந்து காசைப் பறித்து சென்ற நபர் குறித்து வீடியோ ஒன்றை காட்டுகிறார்.

அந்த நேரத்தில் விஜயாவிடம்  பணத்தைப் பறித்து சென்றது மீனாவின் தம்பி சத்யா என முத்துவுக்கு தெரிய வருகிறது.

இதை அடுத்து கோபமடைந்த முத்து, மீனாவின் வீட்டுக்கு செல்ல அங்கு அவரது அம்மாவும் சீதாவும் பேசுவதைக் கேட்டு, சத்யா பற்றிய உண்மையை சொல்ல முடியாமல் மீண்டும் செல்கிறார்.

எனினும் சத்யா எங்கே என கேட்க,  காலேஜ் போனதாக அவர்கள் சொல்ல முத்து கிளம்புகிறார். இதை தொடர்ந்து சத்யாவின் காலேஜ் போய் விசாரிக்க, அவன் ரெண்டு மூணு நாளா காலேஜ் பக்கம் வரவில்லை என்று தெரிய வருகிறது.

மறுபக்கம், காருக்கு பணம் கொடுக்காததால் சிட்டிக்கும்  செல்வத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் கை கலப்பாகிறது.

அதனால், செல்வம் சிட்டியை அடித்ததால் சத்யா கோவப்பட்டு செல்வத்தை அடிக்க,  முத்துவும் அங்கு வந்து விடுகிறார்.

இதை தொடர்ந்து, முத்துவுக்கும் சத்யாவுக்கும் சண்டை ஏற்பட்டு,  உன்ன மாமானு கூட பார்க்க மாட்டேன் என்று சத்யா முத்துவுக்கு சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement