• Apr 17 2026

பிரதமர் மோடி என்னை திட்டி விட்டார். கண்ணீர் விட்ட பிரபல நடிகர் ...

Kamsi / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'யாகாவா ராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர்  நிதின் சக்ரவர்த்தி . கடந்த பிப்ரவரி 10-ம் தேதி காலை 10.30 மணியளவில் கடுமையான நெஞ்சுவலி காரணமாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந் நிலையில் அவர் இன்று பிற்பகல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவர் நலமாக இருப்பதாகவும் விரைவில் படங்களின் நடிக்க தொடங்குவார் என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை, நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். எனது உணவுப் பழக்கத்தை நான் கட்டுப்படுத்த வேண்டும். நான் விரைவில் எனது வேலையைத் தொடங்கவுள்ளேன்" என்று கூறினார்.மேலும் நேற்று பிரதமர் மோடி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலையை கவனிக்காததற்காக திட்டியதாகவும் மிதுன் சக்கரவர்த்தி கூறியிருக்கின்றார். கடந்த 1966ம் ஆண்டு பெங்காலியில் வெளியான 'மிரிகயா'என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். 


அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார்.தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தார்.தற்போது நான் நலமாக உள்ளேன். இனி படங்களில் நடிப்பேன் என்றும் கூறி ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் .

Advertisement

Advertisement