• Apr 17 2025

நேற்று போலவே இன்று ஒரு அதிர்ச்சி தகவல்.. பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நேற்று பிரபல மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் என்பவர் சாலை விபத்தில் சிக்கியதால் மரணமடைந்தார் என்ற செய்தியில் இருந்தே இன்னும் திரையுலகினர்  மீளாத நிலையில் இன்று பிரபல சின்னத்திரை நடிகர் மற்றும் அதிமுக மேடை பேச்சாளர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அழகி’ ’தென்றல்’ உட்பட பல சீரியல்களில் நடித்தவரும் அதிமுக பேச்சாளருமான அருள்மணி என்பவர் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 65. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் திருச்சியில் அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய இவர் அதன் பின் சென்னை வந்து சில நாட்கள் ஓய்வு எடுத்து வந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் காலமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

சின்னத்திரையின் பல சீரியல்களில் நெகடிவ் கேரக்டர்களின் நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் தற்போது கூட சில சீரியல்களில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சி பள்ளியையும் நடத்தி வரும் இவர் திரை உலகிற்கு பல சேவைகள் செய்துள்ளார். மேலும் விஜயகாந்த் மறைந்த போது முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்தவர் இவர் தான் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் திடீரென நடிகர் அருள்மணி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதை அடுத்து சின்னத்திரை உலகினர் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர், மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement