• Dec 25 2024

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷாலினி? எப்படி ஒத்துக்க வைத்தார் ஆதிக்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

அஜித்தின் அடுத்த படத்தில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாக கூறப்படுவது திரை உலகினர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் காலதாமதம் ஆகி கொண்டு இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 



இந்த படத்தின் நாயகி, வில்லன் உள்பட நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஐந்து நிமிடங்கள் வரும் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க ஷாலினியிடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அஜித், ஷாலினி ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இந்த படத்தில் ஷாலினி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஆதிக் ரவிச்சந்திரன் வட்டாரங்கள் கூறுகின்றன. 

இருப்பினும் அஜித், ஷாலினி ஆகிய இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் இந்த படத்தில் இல்லை என்றும் ஆனால் ஷாலினி கேரக்டர் சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் இது குறித்த செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement