• Apr 17 2026

‘இந்தியன் 2’ படத்தின் சூப்பர் அப்டேட்.. ஷங்கர் வெளியிட்ட போஸ்டர்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘இந்தியன் 2’ என்பதும் ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது என்பதும் தெரிந்தது. 

தற்போது இந்த படத்தின் டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

முதல் கட்டமாக இன்று மாலை 6 மணிக்கு ‘இந்தியன் 2’ அப்டேட் வெளியாக இருப்பதாக ஷங்கர்  தனது சமூக வலைத்தளத்தில் புதிய போஸ்டர் உடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஊழல் என்பது ஒரு நாட்டின் புற்றுநோய் போல் என்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும் கேப்ஷனாக இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் 'இந்தியன்’ படம் போலவே 'இந்தியன் 2’  படமும் ஊழலுக்கு எதிராக பேசும் ஒரு படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளனர்.



Advertisement

Advertisement