• Dec 26 2024

குற்றம் சாட்டப்பட்ட மலையாள நடிகருடன் ஷாலினி ஜோயா..?? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் நடவடிக்கைகளை பார்த்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவுமே அதிர்ந்து போய் உள்ளன.

அதற்குக் காரணம் மலையாள சினிமாவை தொடர்ந்து அடுத்து எந்த சினிமா துறையில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க உள்ளார்கள் என்ற பயத்திலேயே பலரும் காணப்படுகின்றார்கள். தமிழ் சினிமாவில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் பல முன்னணி நபர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகின்றது.

மலையாள சினிமாவில் நடைபெறும் நடிகைகளுக்கு உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு எதிராக பல விசாரணைகள் எடுக்கப்பட்டது. அதில் பல முன்னணி கதாநாயகர்கள் தொடக்கம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலர் மீது குற்றச்சாட்டுகளும் புகார்களும் குவிந்தவாறு உள்ளன.

ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பித்த சில தினங்களிலேயே மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக மோகன்லால் பதவியை ராஜினாமா செய்தது பல கேள்விகளை எழுப்பியதோடு அவருக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது ஷாலினி சோயாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அதில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நடிகர் பாபுவுடன் பிரபல மலையாள நடிகையும் டிடிஎஃப் வாசனின் காதலியுமான ஷாலினி சோயா காணப்படுகின்றார். இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார்.

தற்போது ஷாலினி சோயா இடைவேளை பாபு உடன் ரீல்ஸ் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் தீயாக வலம் வருகின்றது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Advertisement

Advertisement