• Dec 27 2024

‘இந்தியன்’ நாயகிக்கு மறக்காமல் அழைப்பு விடுத்த ‘இந்தியன் 2’ இயக்குநர் ஷங்கர்.. வைரல் புகைப்படம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஷங்கர் தனது மகளின் திருமணத்திற்காக தனது திரையுலக நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரும் நிலையில் 1996 ஆம் ஆண்டு வெளியான ’இந்தியன்’ படத்தில்  நடித்த நடிகைக்கு அவர் அழைப்பிதழ் கொடுத்துள்ளதாக தெரிகிறது.  

கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்வசி உள்பட பலர் நடிப்பில் உருவான ’இந்தியன்’ திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்த மனிஷா கொய்ராலாவுக்கு தான் தற்போது ஷங்கர் மும்பையில் தனது மகளின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. 


’இந்தியன்’ மட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் உருவான ’முதல்வன்’ படத்திலும் மனிஷா கொய்ராலா தான் நாயகி என்பதால் ஷங்கரின் விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஷங்கர் ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகையை அடுத்த படத்திற்கு பயன்படுத்த மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் மனிஷா கொய்ராலாவை மட்டும் தான் அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் உடனான இந்த சந்திப்பு குறித்து மனிஷா கொய்ராலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நீண்ட இடைவேளைக்கு பிறகு ஷங்கர் அவர்களை சந்தித்தது தனக்கு மகிழ்ச்சி என்றும் ’இந்தியன்’ ’முதல்வன்’ படங்களை என்னால் மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement