• Dec 27 2024

ஷங்கரின் சம்பந்தி இவ்வளவு பெரிய பணக்காரரா? அவர் முன் ஷங்கர் எல்லாம் தூசுதான் போல..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் நேற்று முன்தினம் மிகவும் சிறப்பாக நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்பட பலர் வருகை தந்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஷங்கரின் மருமகன் ஒரு உதவி இயக்குனர் என்றும் ஷங்கரிடம் தான் அவர் உதவி இயக்குனராக  வேலை பார்த்தார் என்றும் கூறப்பட்ட நிலையில் அவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.



ஷங்கரின் மருமகன் தருண் கார்த்திக் உதவி இயக்குனர் தான் என்றாலும் அவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இல்லை என்றும் இயக்குனர் ஹரி இயக்கிய ’ரத்னம்’ என்ற படத்தில் தான் உதவி இயக்குனராக இருந்தார் என்றும் அவரே தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் சினிமா என்பது தனக்கு ஃபேஷன் என்றும் தனது அப்பாவின் தொழிலை கவனித்துக் கொள்வது தான் தனது முழு நேர பணி என்றும் தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் சம்பந்தி ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்றும், அமெரிக்காவில் அவர் ஐடி கம்பெனி வைத்திருக்கிறார் என்றும், தருண் கார்த்திக்கும் ஐடி படித்திருக்கிறார் என்பதால் அவருடைய கம்பெனிகளை மேற்பார்வையிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஷங்கரின் ஒரு படத்தின் சம்பளம் அவருடைய சம்மந்தியின் ஒரு மாத வருமானம் என்றும், அமெரிக்காவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்றும் கூறப்படுகிறது.



சினிமா என்பது தனக்கு ஃபேஷன் என்பதால் தான் அப்பாவின் நண்பர் என்ற முறையில் ஹரியின் ’ரத்னம்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாகவும் தன்னுடைய அப்பாவின் தொழில் தான் தனக்கு முக்கியம் என்றும் தருண் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் ஐஸ்வர்யா தனது கணவருடன் அமெரிக்காவுக்கு சென்று விடுவார் என்றும்  அமெரிக்காவில் அவர் கோடீஸ்வரர் வீட்டின் மருமகள் என்பதால் அவருடைய எதிர்காலம்  மிகவும் சிறப்பாக இருக்கும் என்று அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement