• Dec 26 2024

விஜயாவை வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன ஸ்ருதி! சகுனி வேலை பார்த்த ரோகிணி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், விஜயாவையும் மனோஜையும் ஸ்ருதி பேயாக பேசி கதற விடுகின்றார். மேலும் இது எனது வீடு.. வீட்டை விட்டு வெளியே போ என விஜயாவை விரட்டுகின்றார். பயத்தில் விஜயா நடுங்குகிறார்.

அதன் பின்பு கதவை திறந்து விஜயா வெளியே வந்ததும், ஸ்ருதி  மீனா இழுத்துக் கொண்டு ஓடி ஒளிந்துக்கொள்கின்றார்கள். அந்த நேரத்தில் மனோஜூம் பயந்து கொண்டு வெளியே வருகின்றார். அப்போதும் மீனா வேண்டாம் என்று சொல்லவும் ஸ்ருதி தொடர்ந்து பயம் காட்டுகின்றார். 

இதனால் மீனா லைட்டை போட்டு விட்டு விஜயாவுக்கு தண்ணி கொடுக்கின்றார். மேலும் இது எல்லாம் உன்னோட வேலை தானா என மீனாவுக்கு விஜயா பேச, ஸ்ருதி இது எல்லாம் நான் தான் பண்ணினேன். உங்களுக்கு பயம் இல்லை என்று சொன்னீர்களே அதனால தான் அப்படி பண்ணினேன் என்று சொல்லி செல்லுகின்றார்.

மறுநாள் முத்து சவாரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து மீனாவிடம் காசை கொடுத்துவிட்டு இரவெல்லாம் கண் விழித்து  ஓடியதால் கண் எரிவதாக சொல்லவும், மீனா அவருக்கு எண்ணெய் சூடாக்கி கொண்டு வருகின்றார். இன்னொரு பக்கம் ரவிக்கு டி-ஷர்ட் ஒன்றை ஸ்ருதி வாங்கி கொடுக்க அவர் இந்த கலரில் டி-ஷர்ட் இருப்பதாக சொல்ல, ஸ்ருதி கோபத்தில் வேகமாக வெளியே வந்து மீனாவுடன் மோதிக் கொள்கின்றார்.


இதனால் எண்ணெய் தவறி கீழே சிந்தி விடுகின்றது. இதன் போது தான் கிளீன் பண்ணுவதாக ஸ்ருதி சொல்லவும் இல்லை நீங்கள் போங்க நான் கிளீன் பண்ணுகிறேன் என்று மீனா உள்ளே செல்லும்போது அந்த நேரத்தில் விஜயா அங்கு வந்து வழுக்கி செல்ல, அவரை பிடிக்க சென்ற மீனாவும் வழுக்கி விழுகின்றார்.

இதனால் மீனாவும் விஜயாவும் கீழே விழ, எல்லாரும் ஓடி வந்து விடுகின்றார்கள். முத்து விஜயாவை தூக்க செல்லவும் விஜயா அவரை தட்டி விடுகின்றார். அத்துடன் தன்னை கொலை முயற்சி பண்ணுவதாக மீனா மீது குற்றம் சாட்ட, ஸ்ருதி என்னால் தான் எண்ணெய் தட்டுப்பட்டது என்று சொல்லவும் அவர் கேட்கவில்லை.

மனோஜூம் நேற்றும் இப்படித்தான் பேயைக் காட்டி பயம் காட்டினார்கள் என சொல்ல, விஜயா மீனாவுக்கு பேசுகின்றார். இதனால் அங்கு வந்த ஸ்ருதி நான் தான் சொன்னேன் தானே.. எல்லாம் நான் செய்த காரியம் என்று பிறகு ஏன் மீண்டும் மீண்டும் மீனாவை திட்டுறீங்க? உங்களுக்கு மீனாவை திட்ட சாட்டு வேண்டுமா என குரலை உசத்தி பேச, அவர் போனதும் மீனா சொல்லிக் கொடுத்துத்தான் ஸ்ருதி இப்படியெல்லாம் செய்வதாக ரோகினி விஜயாவுக்கு ஏத்தி விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement