• Dec 27 2024

இதுமட்டும் நடந்துருச்சுன்னா நம்ம லைஃப் செட்டில்.. ‘சிறகடிக்க ஆசை’ ஜீவா போடும் மாஸ்டர் பிளான்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் சின்ன சின்ன கேரக்டருக்கு கூட முக்கியத்துவம் தருவது தான் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

முத்து - மீனா,  மனோஜ் - ரோகிணி, ரவி - ஸ்ருதி மற்றும் அண்ணாமலை - விஜயா ஆகிய எட்டு முக்கிய கேரக்டர்களும், சில  சின்ன சின்ன கேரக்டர்களும் இந்த சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது என்பது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் நடிக்கும் நடிகை அட்சய பாரதி ரீஎண்ட்ரி ஆன நிலையில் சமீபத்தில் தான் ரோகிணி மற்றும் மனோஜ் அவரை மிரட்டி 30 லட்சம் ரூபாய் வாங்கினார்கள் என்பது தெரிந்தது. இந்த நிலையில் மீண்டும் ஜீவா கேரக்டர் சிறகடிக்க ஆசை சீரியலில் வர இருப்பதாகவும் அண்ணாமலை - விஜயா குடும்பத்தில் ஒரு குழப்பத்தை உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை அட்சய பாரதி நடித்த குறும்பட முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரூபா என்ற கேரக்டரில் நடித்துள்ள அட்சய பாரதி தனது கணவர் வாசுவுடன் சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடுவதும், அவர்களுக்கு இடையே உள்ள அன்பு நெருக்கமாவதுமான காட்சிகள் இந்த முன்னோட்ட வீடியோவில் உள்ளன. இந்த முன்னோட்ட வீடியோவின் இறுதியில் ’இதுமட்டும் நடந்துருச்சுன்னா நம்ம லைஃப் செட்டில்’ என்று அட்சய பாரதி கூறுகிறார். இந்த குறும்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement