• Dec 27 2024

ஜீவாவை தரதரவென போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்ற மீனா-ரோகிணி.. 27 லட்சம் கிடைச்சிருச்சா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மனோஜை ஏமாற்றி 27 லட்சத்தை கொண்டு சென்ற ஜீவாவை தேட மனோஜ் மற்றும் ரோகிணி முடிவு செய்கின்றனர். இந்த நிலையில் ஜீவா மீண்டும் கனடாவில் இருந்து இந்தியா திரும்பும் நிலையில், அவர் தற்செயலாக முத்து காரில் வருவது போன்ற வீடியோ நேற்று வெளியாகி வைரலானது என்பதையும் பார்த்தோம். 

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புகைப்படங்களிலிருந்து ஜீவாவை மீனா மற்றும் ரோகிணி ஆகிய இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது போன்ற காட்சியை பார்க்கும்போது ஜீவா வசமாக மீனா, ரோகிணிடம் சிக்கிக்கொண்டார் என்பது தெரிய வருகிறது. 

ஜீவா, ரோகிணி மற்றும் மீனா ஆகிய மூவரும் போலீஸ் ஸ்டேஷன் முன் எடுத்துக் கொண்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து போலீஸ் ஸ்டேஷனில் இந்த மூவரும் இருக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது என்பதும் ஜீவாவை மீனா மற்றும் ரோகிணி ஆகிய இருவரும் போலீசில் பிடித்துக்  கொடுத்த காட்சி படமாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. 

மொத்தத்தில் ஜீவாவின் வருகை ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினாலும் அவரிடமிருந்து 27 லட்ச ரூபாயை ரோகிணி பெற வேண்டும் என்ற திட்டம் பலிக்குமா? அப்படியே 27 லட்ச ரூபாய் கிடைத்தாலும் அந்த பணம் மொத்தமாக ரோகிணிக்கு கிடைக்குமா? என்பதை எல்லாம் இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஏற்கனவே அண்ணாமலை ’நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த காசு, அது கண்டிப்பாக நம் கைக்கு வந்தே தீரும் என்று நம்பிக்கையுடன் அவ்வப்போது கூறிவரும் நிலையில், தற்போது அந்த 27 லட்ச ரூபாய் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் கதையில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

அனேகமாக இந்த வாரமே போலீஸ் ஸ்டேஷனில் ஜீவாவை விசாரிக்கும் காட்சியும் அவரிடமிருந்து 27 லட்ச ரூபாய் அல்லது அவர் எவ்வளவு வைத்திருக்கிறாரோ அந்த பணத்தை வாங்கி அண்ணாமலை குடும்பத்தாரிடம் போலீஸ் ஒப்படைக்கும் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement

Advertisement