• Dec 27 2024

மீனா-ஜீவா திடீர் சந்திப்பு.. கோபப்படும் ஜீவா.. கதையில் முக்கிய திருப்பம் இருக்குது..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீவா கேரக்டரில் நடித்த அட்சயபாரதியுடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்த நிலையில் அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சி விரைவில் சீரியலில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் சமீபத்தில் தான் ஜீவா கேரக்டர் மீண்டும் ரீஎன்ட்ரி ஆனது என்பதும் மனோஜ் மற்றும் ரோகிணி இடம் வசமாக மாட்டிக் கொண்ட ஜீவா வேறு வழியில்லாமல் 30 லட்சம் ரூபாயை கொடுத்தார் என்பதையும் பார்த்தோம். ஆனால் அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் முத்து தெரியாமல் சாட்சி கையெழுத்து போட்டு இருக்கும் நிலையில் அது ஒரு பஞ்சாயத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை இந்த சீரியலில் மீனா மற்றும் ஜீவா இணைந்த காட்சிகள் இல்லாத நிலையில் தற்போது இருவரும் இணைந்த காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த படப்பிடிப்பின் இடையில் தான் மீனா ஜீவாவுடன் சேர்ந்து எடுத்த ரிலீஸ் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மீனா மற்றும் ஜீவா எதிர்பாராமல் சந்தித்தால் மனோஜ்க்கு 30 லட்சம் ரூபாய் கொடுத்ததை மீனாவிடம் ஜீவா சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் அதனால் வீட்டில் இன்னொரு பூகம்பம் எழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரோகிணி, தன்னுடைய அப்பா பணம் கொடுத்ததாகத்தான் வீட்டில் சொல்லியுள்ளார். அதுவும் 30 லட்சம் என்று சொல்லாமல் 15 லட்ச ரூபாய் மட்டுமே என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில் மீனாவிடம் ஜீவா 30 லட்ச ரூபாய் கொடுத்ததாக சொன்னால், அண்ணாமலை வீட்டில் ஒரு பிரளயமே நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில் இனி அடுத்தடுத்து வரும் காட்சிகள் சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement