• Dec 27 2024

மீனா, பலகுரல்.. நீங்கள் ரெண்டு பேரும் இந்த பிராடு கூட சேராதீங்க.. ரோகிணிக்கு குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் மீனா, ரோகிணி மற்றும் ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா, சல்மா அருண் மற்றும் ப்ரீத்தா ஜனார்த்தனன் ஆகிய மூவரின் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா, ஜோதிகா நடித்த ’பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’காதல் வந்ததும்  கன்னியின் உள் காதலை’ என்ற பாடலுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பு நடக்கும் வீட்டின் மொட்டை மாடியில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மூவரும் இந்த வீடியோவில் சிறப்பாக டான்ஸ் ஆடிய நிலையில் இந்த வீடியோவுக்கு கோமதி பிரியா கேப்ஷான  அந்த பாடலின் வரிகளை பதிவு செய்துள்ளார். அந்த வரிகள் இதுதான்:

காதல் வந்ததும்
கன்னியின் உள் காதலை
யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயில் இறகாய்
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ
அவனோடு சென்றால் வரமாட்டாய்
அது தானே பெரும்பாடு

 இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக ’மூவரும் ஏஞ்சல் போல் இருக்கிறீர்கள்’ ’உங்களை கட்டிக்கிட்டு உங்க புருஷங்க தான் பெரும்பாடு, அதுல ரவி ஓவர்டைம் பாக்குறான்’ ‘என்ன மூன்று பேரும் சேர்ந்து டான்ஸ் ஆடுறீங்க, இருங்க உங்க மாமியார் கிட்ட போட்டு தாரேன்.’ என பதிவாகியுள்ளது

குறிப்பாக ஒரு ரசிகர் ‘இந்த பிராடு பார்லர் அம்மா கூட நீங்க ரெண்டு பேரும் சேராதீங்க, பல குரல், மீனா நீங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க, அதனால இந்த பிராடு கூட சேராதீங்க, இந்த லேடி ஒரு பெரிய கிரிமினல்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது.



Advertisement

Advertisement