• Jul 26 2025

பாட்டி போட்ட உத்தரவு.. கிச்சனில் அண்ணாமலை - விஜயா ரொமான்ஸ் மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும் குடும்பம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பாட்டி போட்ட உத்தரவு காரணமாக விஜயா கிச்சனுக்கு வந்து தோசை போட, அண்ணாமலை அதை சாப்பிட, அந்த ரொமான்ஸை குடும்பமே மறைந்து நின்று வேடிக்கை பார்க்கும் காட்சி இன்றைய முன்னோட்டம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலின் முன்னோட்ட வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் அண்ணாமலை மற்றும் விஜயா ஆகிய இருவரையும் பாட்டி சமாதானப்படுத்திய காட்சிகள் உள்ளன.



அதன் பின் ’மீனா அவளோட புருஷனுக்கு செஞ்சு கொடுக்கட்டும்,  நீ உன்னோட புருஷனுக்கு  செஞ்சு கொடு’ என்று பாட்டி சொல்ல, ’நானா’ என அதிர்ச்சி அடையும் விஜயா, அதன் பின் கிச்சனுக்கு சென்று தோசை போடுகிறார்.

பின்னால் வரும் அண்ணாமலை ’எனக்கு இரண்டு போதும்’ என்று சொல்ல இந்த ரொமான்ஸ் காட்சியை மனோஜ், முத்து, ரவி, ரோகிணி, ஸ்ருதி ஆகியோர் மறைந்து நின்று மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்க்கும் காட்சிகளுடன் முன்னோட்ட வீடியோ முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement