• Dec 26 2024

’எல்.ஐ.கே’ தயாரிப்பாளர் மாற்றம்? யாராவது கவனித்தீர்களா? அஜித்தால் நயன் எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’எல்ஐசி’ படத்தின் டைட்டில் ’எல்.ஐ.கே’ என்று மாற்றப்பட்டு இன்று புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதுவரை இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் என்று இருந்த நிலையில் இன்றைய போஸ்டரில் தயாரிப்பாளர் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை யாராவது கவனித்தீர்களா என்று தெரியவில்லை.

’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவது மற்றும் பட்ஜெட் அதிகரித்துக் கொண்டே போவது போன்ற காரணங்களாலும் அது மட்டும் இன்றி சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் மிகவும் மந்தமாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளர் நிறுத்தி வைக்க முடிவு செய்ததாக செய்திகள் வெளியானது.



ஏற்கனவே அஜித் படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவனின் படம் ட்ராப்பான நிலையில் இந்த படமும் டிராப் ஆகிவிடக்கூடாது என்றும் அவ்வாறு டிராப் ஆனால் விக்னேஷ் சிவனின் பெயர் திரையுலகில் டேமேஜ் ஆகிவிடும் என்று முடிவு செய்த நயன்தாரா, ‘எல்.ஐ.சி’ படத்தை அவரே தயாரிக்க முடிவு செய்தார்.

இதையடுத்து தான் இன்றைய போஸ்டரில் தயாரிப்பாளர் பெயர் நயன்தாரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் அதே நேரத்தில் தயாரிப்பு மற்றும் வழங்குபவர் என்று லலித் பெயர் இருக்கிறது என்பதும் படம் ரிலீஸ் ஆன பிறகு இந்த படத்தின் லாபத்தில் அவர் செலவு செய்த தொகைக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் விக்னேஷ் சிவனின் படம்  டிராப் ஆகக்கூடாது என்று நயன்தாரா எடுத்த அதிரடி முடிவால் தான் இந்த படம் தற்போது மீண்டும் வளர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement