• Dec 26 2024

மீனா தங்கச்சியா இருக்க உனக்கு தகுதியே இல்லை.. சீதா புகைப்படங்களுக்கு பதிவாகும் கமெண்ட்ஸ்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒவ்வொரு நாளும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியலில் முத்து மீனா ஆகிய இரண்டு  முக்கிய கேரக்டர்கள் இருந்தாலும் சின்ன சின்ன கேரக்டர்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுப்பது தான் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த சீரியலில் ஹீரோயின் மீனாவின் தங்கை சீதா கேரக்டரில் நடிக்கும் சங்கீதா லியோனிஸ் அவ்வப்போது தான் சீரியலில் வருவார் என்றாலும், அவர் வரும் காட்சிகள் எல்லாம் சூப்பராக இருக்கும் என்பது தெரிந்தது.

அதுமட்டுமின்றி அவர் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி ப்ரியாவுக்கு கூட இன்னும் திரைப்பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் சங்கீதாவுக்கு கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்துள்ள சங்கீதா அவ்வப்போது தான் நடிக்கும் திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் மற்றும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அதே போல் அவர் தனது நண்பர்களுடன் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் சற்றுமுன் சங்கீதா ஷார்ட் மற்றும் பனியன் அணிந்து கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
’செமையா இருக்கீங்க’ என்றும் ’ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவர் போல் இருக்கிறீர்கள்’ என்றும் ’நீங்கள் ஒரு ஹீரோயின் மெட்டீரியல்’ என்றும் ’கண்டிப்பாக திரை உலகில் நீங்கள் பெரிய அளவில் சாதிப்பீர்கள்’ என்றும் பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது

அதேபோல் ’மீனா ரொம்ப அடக்கமா எவ்வளவு டீசண்டா டிரஸ் பண்றாங்க, ஆனா நீங்க இவ்வளவு கேவலமா டிரஸ் பண்ணி இருக்கீங்களே, அவர்களெல்லாம் தங்கச்சியாக இருக்க உனக்கு தகுதியே இல்லை’ போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement