• Dec 26 2024

தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதீங்க.. தங்கமயிலுக்கு அதிர்ச்சி கொடுத்த கதிர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நேற்று தன்னை கேட்காமல் டியூஷன் எடுத்ததற்கு கோபம் அடைந்த பாண்டியன் அனைவரையும் திட்டி வருகிறார். அது குறித்து கதிர் பேசவந்த போது கூட ’இது என்னுடைய வீடு, நான் சம்பாதித்து உழைத்து கட்டிய வீடு, நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும், உங்கள் இஷ்டப்படி நடப்பதாக இருந்தால் அவரவர் பொண்டாட்டிகளை கூப்பிட்டு வெளியே சென்று விடலாம்’ என்று கூற கதிர் அதிர்ச்சி அடைந்தார்.

கோமதியும் பாண்டியனை எவ்வளவே சமாதானப்படுத்தியும் பாண்டியன் சமாதானம் ஆகாமல் ’இனிமேல் என்னை கேட்காமல் எதுவும் இந்த வீட்டில் நடக்க கூடாது’ என்று கூறினார். இதனை அடுத்து ராஜி அழுது கொண்டிருக்கும் நிலையில் அவரை கோமதி மற்றும் பழனி மாமா சமாதானப்படுத்துகிறார்கள். நம்ம மேலேயும் தப்பு இருக்கு, நாம் ஒரு வார்த்தை அவரிடம் சொல்லி இருக்கலாம் என்று கோமதி கூறினார்.



இந்த நிலையில் செந்திலிடம் ராஜி ’மாமா என்னால் தான் எல்லோரையும் திட்டிவிட்டார்’ என்று வருத்தப்பட ’இதற்கெல்லாம் வருத்தப்படாதே, அப்பா இப்படித்தான், நீ டியூஷன் எல்லாம் எடுக்க வேண்டாம், படிக்கிற வேலையை பார், உனக்காக நான் செலவு செய்கிறேன்’ என்று ஆறுதல் கூறுகிறார்.

இந்த நிலையில் கதிர் வேலைக்கு செல்லும் போது தங்கமயில் அவரிடம் ’எதற்காக நண்பரின் பைக்கை வாங்கி ஓட்டுகிறீர்கள், உங்கள் அப்பாவிடம் ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டு அவரிடமே பைக்கை வாங்கி ஓட்டலாமே’ என்று சொல்ல ’உங்களிடம் நான் ஒரு விஷயம் பேச வேண்டும், எதற்காக நீங்கள் தேவையில்லாத வேலையை செய்கிறீர்கள், டியூஷன் எடுப்பது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது, அதை ராஜியோ அல்லது அம்மாவோ சமயம் பார்த்து சொல்லி இருப்பார்கள், நீங்கள் கூறியது தப்பு’ என்று கூற தங்கமயில் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் சென்னையில் செந்தில் மற்றும் ராஜி ஆகிய இருவரும் சென்னை சுற்றி பார்க்க பிளான் போடும்போது பாண்டியன் தொடர்ந்து போன் செய்து கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement