• Dec 27 2024

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் திடீர் விசிட் அடித்த 2 பிரபலங்கள்.. பாட்டிக்கு முத்து சர்ப்ரைஸ் இதுதானா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிடைக்க ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இரண்டு பிரபலங்கள் திடீர் விசிட் ஆனதை அடுத்து முத்துவின் சர்ப்ரைஸ் இதுதானா என்று நினைக்க தோன்றுகிறது.

தனது 80வது பிறந்த நாளில் யார் சிறப்பான பரிசு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு நான் ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுப்பேன் என்று பாட்டி கூறியுள்ள நிலையில் எல்லோரும் பாட்டிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முத்து மற்றும் மீனா ஆகிய இருவரும் தங்களிடம் பணம் இல்லை என்பதால் எந்த பரிசும் கொடுக்க முடியவில்லை என்ற கவலையில் இருக்கும் நிலையில் தற்போது மனோஜ் தனது சமூக வலைத்தளத்தில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் பழம்பெரும் நடிகைகள் கேஆர் விஜயா, வடிவுக்கரசி ஆகிய இருவரும் என்ட்ரி ஆகியுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதையடுத்து சில யூகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.



முத்து தற்செயலாக கேஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசியை தன்னுடைய காரில் சவாரியாக ஏற்றி இருக்கலாம் என்றும் அப்போது பாட்டிக்கு அவர்கள் இருவரையும் பிடிக்கும் என்பதால் தன்னுடைய வீட்டுக்கு வரும் வகையில் கோரிக்கை வைத்திருக்கலாம் என்றும் அந்த கோரிக்கையை ஏற்று அவர்கள் இருவரும் பாட்டியின் பிறந்தநாளுக்கு வந்திருக்கலாம் என்றும் இதை அடுத்து முத்து தான் தனக்கு சிறந்த கிப்ட் கொடுத்ததாக பாட்டி மகிழ்ச்சி அடைந்த அவருக்கு ஸ்பெஷல் பரிசு கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பதிவு பதிவில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்த ஸ்ரீதேவா கூறியிருப்பதாவது: என் பள்ளி பருவத்தில் பலமுறை என் அம்மாவுடன் சேர்ந்து நல்ல நேரம் எம்ஜிஆர் திரைப்படத்தை மற்றும் ஜீபூம்பா ( பட்டணத்தில் பூதம் ) பலமுறை பார்த்திருக்கிறேன் அந்த திரைப்படத்தின் கதாநாயகி அம்மா மூத்த நடிகர் கே.ஆர் விஜயா அவர்கள் நம் சிறகடிக்க ஆசை படப்பிடிப்பு தளத்தில் இன்று நான் சிறிதும் எதிர்பாரா நேரத்தில் வருகை தந்தார். அவர்களை நேரில் சந்தித்த நிமிடம் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது! அவர்கள் பாதம் தொட்டு வணங்கி மென்மேலும் உயர்நிலை வாழ்வில் அடைய வேண்டும் என என அவரின் இனிப்பான வாழ்த்துக்களை பரிசாக பெற்றுக் கொண்டேன்’ என பதிவு செய்துள்ளார்.



Advertisement

Advertisement