• Dec 27 2024

ரயில் முன் விழுந்து மீனா தற்கொலையா? விஜயாவிடம் மனோஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

'சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா காணாமல் போய்விட்டதை அடுத்து அவரை குடும்பத்தோடு தேடி வருகின்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் நாளைய எபிசோட்டில் மீனா ரயில் முன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று மனோஜ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் மீனா திடீரென யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு சென்றதை அடுத்து அவரை வீட்டில் உள்ள அனைவரும் தேடுகின்றனர்.

குறிப்பாக முத்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த நிலையில் அங்கு வரும் மீனாவின் தம்பி சத்யா ’நீங்கதான் என் அக்காவை ஏதோ செய்து விட்டீர்கள்’ என்று கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நாளைய எபிசோடில் ’மீனா ஏதாவது லெட்டர் எழுதி வைத்துவிட்டு போனாளா? என்று மனோஜ் கேட்க விஜயா ’அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே’ என்று சொல்கிறார். ’இது போன்ற காணாமல் போனவர்கள் மாமியார் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என லெட்டர் எழுதி வைத்துவிட்டு செல்வார்கள்’ என்று மனோஜ் கூற ’என்னடா இப்படி சொல்கிறாய் ’என்று விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

அதுமட்டுமின்றி ’அவங்க அப்பா ஏற்கனவே ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டவர் தானே, அதேபோல் மீனாவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்’ என்று மனோஜ் கூறுவது விஜயாவுக்கு மேலும் வயிற்றை கலக்குகிறது.

 இந்த நிலையில் மனோஜ் சொன்னபடி மீனா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மீனாவை யாரேனும் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது மன வருத்தம் காரணமாக அவர் கோவிலில் உட்கார்ந்து இருப்பாரா? என்பது நாளைய எபிசோடில் தான் தெரிய வரும்.

Advertisement

Advertisement