• Dec 27 2024

மீனாவை அசிங்கப்படுத்தி சிறகடிக்க ஆசை சீரியலை போட்டுத்தள்ள முளைத்த விஷமிகள்! அதிர்ச்சி தகவல்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது மேலும் பிரபலமாகி உள்ளது. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நகர்வதால் இதற்கு பல ரசிகர்கள் அடிமையாக காணப்படுகின்றார்கள்

இந்த சீரியலில் தற்போது ஜீவா மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளார். மனோஜ் கனடா வேலைக்கு போவதற்கு பணம் வேண்டும் என்று பிச்சை எடுக்கும் நிலைக்கும் சென்றார். ஆனால் தற்போது பணம் கிடைத்தும் அவரால் கனடா போக முடியவில்லை. இதனால் அந்த காசை வைத்து புது பிசினஸ் செய்வதற்கு முடிவு எடுத்துள்ளார்.

ரோகினியும் விஜயாவின் வாயை அடைப்பதற்காக அது எனது அப்பா அனுப்பிய காசு என நன்றாக உருட்டி உள்ளார். அதையும் நம்பி விஜயா ஸ்ருதிக்கும் மேலாக அவரை கவனித்து வருகிறார்.

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகன், நாயகியாக முத்துவும் மீனாவும் காணப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் இந்த சீரியலில்  ஊறுகாய் போல உள்ளதாகவும், ஏனைய கேரக்டர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.


இந்த நிலையில், தற்போது மீனா மீது தமது கொந்தளிப்பை திருப்பி உள்ளார்கள் ரசிகர்கள். அதாவது இந்த சீரியலில் மீனாவின் கதாபாத்திரம் மிகவும் பாவமானதாகவும் அப்பாவி தனமாகவும் காணப்படுகிறது. பிறர் என்ன தீங்கு செய்தாலும் பொறுத்துக் கொண்டு செல்லும் ஒரு கதாபாத்திரமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக மீனா கேரக்டரை பார்க்க எரிச்சலா இருக்கு. கொஞ்சம் கூட அறிவும் இல்லை. முத்து எடுத்து சொன்னாலும் மீனாக்கு புரிய மாட்டேங்குது. ரோகிணி மேல டைரக்டருக்கு என்னதான் அவ்வளவு பாசம். இந்த ஸ்கிரிப்ட் ஏன் இப்படி கேவலமாக கொண்டு போறாங்க.. சிறகடிக்க ஆசை சீரியல் பார்க்கவே வெறுப்பா இருக்கு என தமது அது திருப்தியை வெளியிட்டு வருகிறார்கள்.

இதேவேளை, சிறக்கடிக்க ஆசை சீரியல் தற்போது சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வருகின்றது. இதை பிடிக்காத யாரோ தான் தற்போது தொடர்ந்தும் எதிராக சதி செய்கிறார்கள் என இன்னும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement