• Dec 28 2024

படையப்பா நீலாம்பரியாக மாறிய மீனா.. அப்பாவியாக இருப்பவருக்கு இனிமேலாவது புத்தி வருமா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் அப்பாவியாக இருக்கும் மீனா எப்போதுதான் புத்திசாலித்தனமாக மாறுவார் என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நீலாம்பரி ஆக மாறிய வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் கேரக்டர் அன்பு, பாசம் நிறைந்த ஒரு கேரக்டராக ஆரம்பத்தில் அறிமுகமானது என்பதும் தாய், தந்தை மீது பாசமாகவும் தம்பி, தங்கை மீது அன்பு வைத்து இருக்கும் கேரக்டராக இருந்தது என்பது தெரிந்தது.

அதன் பின்னர் எதிர்பாராத விதமாக திருமணம் நடந்த போதும் தனது கணவன் முத்து குடிகாரன் மற்றும் கோபக்காரனாக இருந்தபோதிலும் கணவன் மீது பாசத்தை கொட்டி வைத்தார் என்பதும் அவர் போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கிய போது கணவனுக்காக பேசி அவரை காப்பாற்றினார் என்பதும் தெரிந்தது. அதேபோல் மீனாவை விஜயா கொடுமைப்படுத்திய போதிலும் அத்தை என்ற சொல்லுக்கு மறுசொல் சொல்லாமல் அவர் மீது இன்னும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கேரக்டராக மீனா உள்ளார்.

இந்த நிலையில் மீனாவின் கேரக்டர் ரொம்ப நல்லவராக இருப்பதால் சில சமயம் கடுப்பாகிறது என்பதும் கெட்டவர்களை கூட அவர் புரிந்து கொள்ளாமல் நல்லவர்களாக அவர்களை பார்ப்பதுதான் மீனா கேரக்டரின் பலவீனம் என்று கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக ரோகிணி மீனாவுக்கு எதிராக பல சதிகள் செய்த போது முத்து அதை சுட்டிக்காட்டிய போதும், அதை நம்பாமல் ரோகிணியை இன்னும் நம்பி கொண்டிருப்பது அவர் உண்மையில் நல்லவரா அல்லது ஏமாளியா என்ற கேள்வியை எழுப்பிள்ளது.

இனிமேலாவது சுதாரித்து அவர் நல்லவராக மட்டும் இல்லாமல் வல்லவராகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும் என்று இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களின் ஆசையாக உள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா, தனது சமூக வலைத்தளத்தில் ’படையப்பா’ நீலாம்பரியின் பின்னணி இசைக்கு தகுந்தவாறு வீடியோ பதிவு செய்துள்ள நிலையில் இனிமேலாவது அவர் படையப்பா நீலாம்பரி போல் ஆக்ரோஷமாக தனது கேரக்டரை மாற்றிக் கொள்வாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement