• Dec 27 2024

நீங்க விஜய் சேதுபதி மாதிரி இருக்கீங்க.. முத்துவை தொகுப்பாளினி சொன்ன போது மீனாவின் ரியாக்சன்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா ஆகிய இருவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அந்த பேட்டியின் போது ’முத்துவை பார்த்து நீங்கள் விஜய் சேதுபதி போல் இருக்கிறீர்கள்’ என்று தொகுப்பாளினி சொல்லும் போது வெற்றி வசந்த் ரொம்ப வெட்கப்பட்டார். அப்போது மீனாவும் அவரை கிண்டலாக பார்க்கிறார்.

அதன் பிறகு கோமதி பிரியாவுடன் ’நீங்க முத்து உடன் சேர்ந்து டான்ஸ் ஆட போகிறீர்களா? என்று கேட்டபோது அவர் ’ஆடிட்டா போச்சு, எனக்கு முத்து டான்ஸ் கற்றுக் கொடுத்தால் நான் தாராளமாக அவருடன் ஆடுவேன்’ என்று கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’சிறகடிக்க ஆசை’ சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணம் முத்து மற்றும் மீனா கேரக்டர்களின் கெமிஸ்ட்ரி தான் என்றும் இதுவரை ஒளிபரப்பான எந்த சீரியல்களிலும் இந்த அளவுக்கு பொருத்தமான ஒரு கெமிஸ்ட்ரி உள்ள ஜோடியை பார்த்ததில்லை என்றும் பலர் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement