• Dec 26 2024

’சிறகடிக்க ஆசை’ மீனா இலுமினாட்டியா? அவரே வெளியிட்ட வீடியோ வைரல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் 8 முக்கிய கேரக்டர்களை வைத்து இயக்குனர் பரபரப்பான காட்சிகளுடன் சீரியலை நகர்த்தி கொண்டிருக்கிறார் என்பதும் அதனால் தான் இந்த சீரியல் ஒட்டு மொத்த டிஆர்பி ரேட்டிங்கில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் முத்து மீனாவுக்கு மட்டும் அடுத்தடுத்து சோதனைகள் வந்து கொண்டிருக்கிறது என்பதும் ஆனால் அனைத்து விதமான பிராடுத்தனம் செய்யும் மனோஜ் மற்றும் ரோகினிக்கு மட்டும் அடுத்தடுத்து செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே வருவது இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.



இந்த நிலையில் இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா மலையாளத்திலும் இந்த சீரியலின் ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பதும் இன்ஸ்டாகிராமில் தற்போது அவர் பிரபலம் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் அவ்வப்போது படப்பிடிப்பின் போது எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் நிலையில் அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது

அந்த வகையில் மீனா மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் மொட்டை மாடியில் பகத் பாசில் நடித்த ’ஆவேஷம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இலுமினாட்டி என்ற பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் காட்சி அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது

இலுமினாட்டி என்ற பெயரை கேட்டாலே பொதுமக்கள் அச்சமடையும் அளவுக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஒரு மர்மமான இயக்கத்தின் பாடலுக்கு கூட மீனா மற்றும் ஸ்ருதி ஜாலியாக டான்ஸ் ஆடியுள்ளனர்.


Advertisement

Advertisement