• Dec 26 2024

'சிறகடிக்க ஆசை’ ரவிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி.. மாஸ் என்ட்ரி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை அடைவது மட்டுமின்றி அனைத்து நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது ஒரிஜினல் பெயரை மறந்து இந்த சீரியலில் உள்ள கேரக்டரை பொதுமக்கள் கூப்பிடும் அளவுக்கு இந்த கேரக்டர்கள் மக்கள் மனதில் பதிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் உள்ள ஜோடிகளில் ஒன்று ரவி - சுருதி என்பதும் இந்த கேரக்டர்களில் பிரனவ் மோகன் மற்றும் ப்ரீத்தா ரெட்டி ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த சீரியலில் இவர்களது இருவரது கேரக்டருமே பாசிட்டிவ்வாக கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது



இந்த நிலையில் பிரனவ் மோகனுக்கு இன்னொரு வாய்ப்பையும்  ஹாட்ஸ்டார் கொடுத்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.  ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ’உப்பு புளி காரம்’ என்ற வெப் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் பொன்வண்ணன் மற்றும் வனிதா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த  வெப் தொடர் ஒவ்வொரு வாரமும் நான்கு எபிசோடுகளை ஹாட்ஸ்டார் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி உள்ள எபிசோடுகளில் பிரனவ் மோகன் ஒரு முக்கிய கேரக்டரில் அறிமுகமானார். பொன்வண்ணன் - வனிதா தம்பதியின் இரண்டாவது மகள் ஜிம்மில் ட்ரெயினராக வேலை செய்யும் நிலையில் அவருக்கு தலைமை ட்ரெயினராக பிரணவ மோகன் அறிமுகம் ஆகி வருவதை அடுத்து இருவருக்கும் காதல் உண்டாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ’உப்பு புளி காரம்’ வெப் தொடர் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரனவ் மோகன் வருகையால் மேலும் விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement