• Dec 26 2024

கவரிங் நகை விஷயத்தில் விஜயா போட்ட பழி..மனோஜை சிக்க வைக்கும் ஸ்ருதி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோடில் நகை எப்படி தொலைந்தது என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே மீனாவின் அம்மா வீட்டில் தான் நகை மாறி இருக்கும் என்று சொல்ல, மீனா கோபப்படுகிறார். எங்க அம்மா அப்படி செய்பவர்கள் இல்லை என்று சொல்ல, உங்க அம்மா நல்லவராக இருக்கலாம், ஒருவேளை உன் வீட்டில் தான் ஒரு திருடன் இருக்கிறானே, அவன் செய்திருக்கலாம் என்று மீனாவின் தம்பி மேல் பழியை போடுகிறார்.

இதனால் மீனா மற்றும் முத்து அதிர்ச்சி அடைய அப்போது அண்ணாமலை, ’எங்க அம்மா கொடுத்த நகையும் மாறி இருக்குது, அது எப்படி என்று கேட்க, உங்க அம்மாவும் கவரிங் நகை போட்டு இருக்கலாம் என்று விஜயா வாய் கூசாமல் கூறுகிறார். இதனால் அண்ணாமலை இதுவரை இல்லாத அளவில் கோபம் அடைந்து எங்க அம்மா மீது பழி சொல்லுகிற வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதே’ என்று எச்சரிக்கிறார்.



அப்போது ஸ்ருதி ’நீங்கள் சொல்வதில் லாஜிக்கே இல்லை, மீனாவின் நகையும் மாறி இருக்கிறது, பாட்டியின் நகையும் மாறி இருக்கிறது, இதை போலீசில் சொல்லலாம்’ என்று கூறுகிறார். அப்போது மனோஜ் பதற்றமடைந்து ‘போலீஸெல்லாம் வேண்டாம் என்று சொல்ல, எல்லோரும் அவர் மீது சந்தேகப்படுகின்றனர். இதனை அடுத்து முத்து ’போலீஸ் எல்லாம் வேண்டாம், இதை எப்படி கண்டுபிடிப்பது என்று எனக்கு தெரியும், நான் கண்டுபிடிக்கிறேன்’ என்று சொல்கிறார்.

இதனை அடுத்து விஜயாவிடம் மனோஜ் ’நல்ல வேலை என்னை காப்பாற்றினீர்கள்’ என்று கூற அப்போது விஜயா, ‘உனக்கு அறிவே இல்லையா, முத்துவுக்கு சந்தேகம் வந்துவிட்டது,, எப்போது வேண்டுமானாலும் இந்த உண்மை வெளிவரலாம், அதற்குள் நீ நான்கு லட்சத்தை கொண்டு வந்து கொடுத்து விடு, நகையை மாற்றி வைத்து விடலாம்’ என்று கூறுகிறார்.

இந்த நிலையில் மீனா மற்றும் முத்து நகை எப்படி மாறியது என்பது கண்டுபிடிக்க வேண்டும்  என்று யோசனை செய்தபோதுதான், நகைக்கடைக்காரர் போல் மனோஜிடம் போன் பேசலாம், என்ற ஐடியா கொடுக்க, அதை ஸ்ருதியை வைத்து பேசலாம் என்று கூறுகின்றனர். இதனை அடுத்து ரவியின் ஹோட்டலுக்கு மீனா மற்றும் முத்து வந்து மனோஜின் வாயிலேயே உண்மையை வரவழைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனை அடுத்து நகை கடைக்காரர் போல் ஸ்ருதி பேச அப்போது மனோஜ் திருட்டுமுழி விழித்து உளற ஆரம்பிப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement