• Dec 25 2024

’கோட்’ படத்தை விட சூப்பர் கதை.. வெங்கட்பிரபுவை வளைத்து போட்ட அடுத்த இளையதளபதி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் தற்போதுகோட்திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் இன்னும் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் அதாவதுதளபதி 69’ படத்தில் மட்டும் நடித்துவிட்டு அதன் பிறகு திரையுலகில் இருந்து விலக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என சில நடிகர்கள் முயற்சி முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அதில் முன்னணியில் சிவகார்த்திகேயன் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இளைய தளபதி பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருக்கும் சிவகார்த்திகேயன்கோட்படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபுவிடம் ஒரு கதை கேட்டதாகவும், அந்த கதைகோட்கதையை விட சூப்பராக இருந்ததை அடுத்து அவரை லாக் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



 
தற்போது ஏஆர் முருகதாஸ் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தை படத்தில் நடிப்பார் என்றும் அதற்குள் அவர்கோட்படத்தை முடித்து விட்டு வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து விஜய் பட இயக்குனர்களை குறிவைக்கும் சிவகார்த்திகேயன் அடுத்த இளைய தளபதி பட்டத்தை விரைவில் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Advertisement

Advertisement