• Dec 26 2024

விஜய்யுடன் ஒரே ஒரு காட்சியில் நடிக்க எத்தனை கோடி சம்பளம்? சிவகார்த்திகேயன் அதிரடி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரே ஒரு காட்சியில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த காட்சியில் நடிக்க அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகளின் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி இந்த படத்தை முடிக்க படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ள நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் ஒரே ஒரு காட்சியில் நடித்தார் என்றும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உரையாடும் இந்த காட்சி கடந்த சில நாட்களுக்கு முன் தான் படமாக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் படப்பிடிப்பை முடித்த விஜய், அவரிடம் உங்களுக்கு இந்த காட்சியில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வேண்டும்? நீங்கள் எவ்வளவு கேட்டாலும் நான் வாங்கி தருகிறேன் என்று கூறியதாகவும் அதற்கு சிவகார்த்திகேயன் ’உங்களுடன் ஒரே ஒரு காட்சியில் நடித்ததே பல கோடி நான் சம்பளம் வாங்கியதற்கு சமம், எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம், உங்களுடன் நடித்த பெருமையை போதும்’ என்று பெருந்தன்மையாக கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மொத்தத்தில் சிவகார்த்திகேயன் ’கோட்’ படத்தில் நடித்ததற்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை என்று தான் பட குழுவினர்களிடமிருந்து தகவல் கசிந்து வருகிறது.

Advertisement

Advertisement