• Dec 27 2024

ராகவா கை காட்டினா மட்டும் போதும்... சற்றுமுன் வீடியோ வெளியிட்ட SJ சூர்யா! என்ன சொன்னாரு தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரை உலகில் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் காணப்படும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா கூட்டணியில் இணைந்து நடித்த படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் ஆடி இருந்தது. இதில் ராகவா லாரன்ஸ் நடிப்பும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.ஜே சூர்யா அதில் ராகவா லாரன்ஸ் யாரை கைக்காட்டுகிறாரோ அவருக்கு உதவி செய்ய நான் தயார் என கூறியுள்ளார். தற்போது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் அவர் கூறுகையில், ஜிகர்தண்டா படத்தில் நடித்த போது மாஸ்டரும் நானும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம் அவர் எனக்கு நண்பராக கிடைத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி.

மேலும் மே 1ஆம் தேதி மாற்றம் என்ற ஒரு அமைப்பை ராகவா தொடங்கியுள்ளார்.  அன்றைய தினம் அவர் யாரை கை காட்டுகிறாரோ அந்த நபருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என்று கூறியுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement