தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு சிறியவர்கள் முதல் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக காணப்படுகின்றார்கள். இவர் நடிக்கும் படங்கள் குடும்பங்களாக சென்று பார்க்க கூடிய வகையிலேயே காணப்படும். இதனாலையே இவர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இடம் பிடித்து வருகின்றார்.
விஜயின் மார்க்கெட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அவர் அரசியலில் களம் இறங்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பல பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனாலும் அவருடைய நற்பணி மக்களுக்கு அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
d_i_a
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களையும் தனது தொண்டர்கள் ஆக்கினார் விஜய். அதன் பின்பு கட்சி தொடர்பான அறிவிப்பு, கொடி, பாடல், மாநாடு என ஒவ்வொன்றையும் சிறப்பாக மேற்கொண்டு இருந்தார்.
தற்போது விஜய் தனது 69 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்குகின்றார். மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே காணப்படுகின்றார். இன்னொரு பக்கம் அரசியல் ரீதியில் ஆகவும் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பற்றி சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில், விஜய் சமீபத்தில் தனது கட்சியில் திமுக கட்சியைச் சேர்ந்த ஒருவரை இணைத்துக் கொண்டார். ஆனால் அவர் திமுகவின் ஸ்லீப்பர்சராக காணப்படுகின்றார். ஆனால் அவருக்கு அப்படி எல்லாம் எளிதில் முத்திரை குத்தி விட முடியாது.
இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியா தான் இந்த உலகையே ஆண்டு கொண்டு இருக்கின்றது. இதனால் ஒருத்தர் அசால்ட் ஆக உள்ளே வர முடியாது. அதற்குக் காரணம் ஏனைய கட்சிகள் விஜயின் தவெக கட்சி மீது கவனத்தை திருப்பி உள்ளனர்.
மேலும் தற்போது ஜன நாயகன் படத்தின் படபிடிப்புக்கள் கம்ப்ளீட்டா முடிச்சிட்டு மார்ச் மாதத்தில் இருந்து மக்களை சந்திக்கிற பணியில் விஜய் களமிறங்க உள்ளார். அதற்கான ஏற்பாடு மும்முரமாக நடக்கின்றது. பெப்ரவரி இரண்டாம் தேதி முதல் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட உள்ளது ..
அதில் முதல்முறையாக விஜய்யின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும் ஒரு பத்திரிக்கையாளராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை பார்க்கும்போது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அத்துடன் 2026 எலக்சனை விஜய் எப்படி முன்னெடுத்து செல்ல போகிறார் என்பதை பார்ப்பதற்கும் ஆவலாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Listen News!