• Feb 01 2025

செல்ஃபி எடுக்கவந்த ரசிகையின் உதட்டில் நச்சென முத்தம் கொடுத்த பாடகர்? வைரல் வீடியோ

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் ஆன உதித் நாராயணன் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, நேபாளி, பெங்காலி என பல மொழிகளில் பாடல்கள் பாடி பிரபலமானவர். இவருக்கு பத்மபூஷன், லதா மகேஷ்கர் விருது, பத்மஸ்ரீ என பல உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழில் அச்சச்சோ புன்னகை, சோனியா சோனியா, காதல் பிசாசே என பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தற்போது 70 வயதாகிறது. ஆனாலும் தனது பாடல்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

d_i_a

இந்த நிலையில், பாடகர் உதயநிதி கலந்து கொண்ட நேரலை நிகழ்ச்சியில் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருக்கும் போது அதில் மகிழ்ந்து போன அவரின் தீவிர ரசிகை ஒருவர் அவருடன் செல்பி எடுக்க மேடைக்கு வந்தார். இதன் போது பெண் ரசிகை செல்ஃபி எடுத்துவிட்டு அவருடைய கன்னத்தில் முத்தம் கொடுக்க பதிலுக்கு அவர் அந்தப் பெண்ணின் தலையைப் பிடித்து திருப்பி உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.


அதுமட்டுமில்லாமல் மற்றொரு பெண் ரசிகை அவரை முத்தமிட்டு கட்டிப்பிடிக்க முயன்ற போது அவருடைய கன்னத்திலும் முத்தம் கொடுத்து அவரை கட்டிப்பிடித்து உள்ளார். இன்னும் ஒரு பெண்ணும் செல்பி எடுக்க  சென்றபோது அவரின் உதட்டிலும் முத்தம் கொடுத்துள்ளார் உதித் நாராயணன்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் உதித் நாராயணனை திட்டி வருகின்றார்கள். அவர் பொது வெளியில் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டது பலருக்கும் முகம் சுளிக்க வைத்துள்ளமை குறிப்பிட்டதக்கது.

Advertisement

Advertisement