இயக்குநர் சந்து மொண்டேடி தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பிலும் உருவான படமே 'தண்டேல்'. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான சாய்பல்லவி , நாகசைதன்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
மேலும் இந்தப் படத்தை பிப்ரவரி 7ம் திகதி வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சமீபத்தில் சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படம் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றது. அந்த வகையில் தண்டேல் படமும் அப்படி ஒரு அமோக வெற்றியை அளிக்கும் என படக்குழு நம்புகின்றது.
இந்த படம் எடுத்ததன் மூலம் நடிகர் கார்த்திக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு உருவாகியது. அது பற்றி நேர்காணல் ஒன்றில் கார்த்தி கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் நாக சைதன்யா வீட்டுக்கு ஷூட்டிங் டைம்ல போவேன். அப்போ டெய்லியும் சைக்கிள் ஓட்டுவேன்.
இதன்போது நாக சைதன்யா நான் கஷ்டப்படாம இருக்கணும்னு அங்க இருக்குற எல்லா ஸ்பீட் பிரேக்கரையும் உடைச்சு விட்டாரு.. அவர் அவளோ நல்ல மனுஷன்.. என்று கார்த்தி நக்கலாக கூறியுள்ளார்.
இவ்வாறு தண்டேல் பட ப்ரோமோஷனின் போது கார்த்திக் மேடையில் பேசியுள்ள இந்த விடயம் சுவாரஸ்யமாக இருந்ததோடு அவர்களின் நட்பை பற்றி பலரும் அறியக்கூடிய வகையில் இருந்தது.
Listen News!