• Dec 26 2024

ரஜினி ஆரம்பித்து கொடுத்த நிறுவனத்தை இரண்டே வருடத்தில் இழுத்து மூடிய செளந்தர்யா..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பித்து வைத்து கொடுத்த நிறுவனத்தை இரண்டு ஆண்டுகளில் அவருடைய இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இழுத்து மூடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ’ஹூட்’ என்ற சமூக வலைதளத்தை தொடங்கினார். இந்த சமூக வலைதளம் மற்ற தளங்கள் போல் டெக்ஸ்ட் மூலம் செய்திகளை பரிமாறுவது கிடையாது. குரல் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்று வித்தியாசமாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த சமூக வலைதளத்தை பயன்படுத்திய நிலையில் அதன் பின்னர் ஒரு கட்டத்தில் பயனாளிகள் இந்த செயலியை விட்டு வெளியே வர தொடங்கினார்.



ஒரு கட்டத்தில் இந்த நிறுவனத்தை நடத்த முடியாது என்று முடிவு செய்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அதை இழுத்து மூட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிறுவனம் மூடப்பட இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் ஏராளமான பயனாளிகள் இந்த செயலியை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ட்விட்டருக்கு போட்டியாக மத்திய அரசு ‘கூ’ என்ற செயலியை ஆரம்பித்து அதை நடத்த முடியாமல் சமீபத்தில் தான் இழுத்து முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement