• Feb 01 2025

'சவகீதா' பாட்டின் புது வெர்ஷனை வெளியிட்டு செம வைப் ஆகிய லைகா.! வேற லெவல் வீடியோ

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் படு  வைரலாக இடம்பெற்று வருகின்றன.. விடாமுயற்சி தொடர்பான அப்டேட்கள், போஸ்டர்கள், வீடியோக்கள் என்பனவற்றையும் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக வெளியிட்டு வருகிறது.

d_i_a

சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு டெய்லரின் பிடிஎஃப் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அதில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டு இருந்தன.


இதைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கியுள்ளதை போஸ்டர் வெளியிட்டு படக்குழு நேற்று அறிவித்தது. மேலும் இன்றைய தினம் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாகவும் லைக்கா நிறுவனம் ரசிகர்களுக்கு உற்சாகத் தகவல் ஒன்றை வழங்கி இருந்தது.


அதன்படி, விடாமுயற்சி படத்தில் இடம் பெற்ற சவகீதா  பாடலின் புது வர்ஷனை வெளியிட்டு ரசிகர்களை மிகுந்த குஷி ஆகி உள்ளது. தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



Advertisement

Advertisement