• Dec 25 2024

சூப்பர் ஸ்டாரை திருமணம் செய்து விதவை ஆன சுமலதா.... ஆனாலும் சாதித்திருக்கிறார்.....

ammu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் பிறந்து தெலுங்கு, மலையாளம் இண்டஸ்ட்ரியில் நம்பர் 1 என்ற பெயர் வாங்கி தொடர்ந்து கன்னட பிலிம் இண்டஸ்ட்ரியில் திருமணம் ஆகி செட்டில் ஆனவர் நடிகை சுமலதா. இவர் 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி சென்னையில் பிறந்தார்.


இவர் சென்னையில் பிறந்தாலும் இவர் ஒரு தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் குண்டூர். குண்டூரில் சென்.ஜோசப் ஸ்கூலில் இவர் படித்தார். இவர் தனது 15 வயதிலே 1979ஆம் ஆண்டு ஆந்திர பிரதேஷுடைய பியூட்டி கான்டெஸ்டில் கலந்து கொண்டு வின் பண்ணி இருகாங்க. 


இதன் பின்னர் அவருடைய face பல மகசினில் வர தொடங்கியது. தெலுங்கு பிலிம் ப்ரொடியூசரான ராம நாயுடு என்பவர் இவரது face பார்த்து இம்ப்ரசன் ஆகி அவரை வைத்து படம் எடுக்கவேண்டும் என்று அவருக்கு 1000 ரூபா அட்வான்ஸ் கொடுத்துள்ளார். 


அப்படி இருந்தும் அவரது முதல் படம் தமிழில் திசை மாறிய பறவை என்ற திரைப்படம் தான் இது 1979ல் வெளியானது. அதற்கு பிறகு தான் தெலுங்கு படத்தில் அதே ஆண்டு நடித்தார். 1980ல் மலையத்தில் படம் நடித்திருந்தார்.


அதை தொடர்ந்து கன்னடா, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். இவர் மொத்தமாக 220 படங்கள் நடித்திருகிறார். அதில் அதிகமா மலையாளம், தெலுங்கில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் ரஜினியுடன் முரட்டு காளை, கழுகு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாளம், தெலுங்கில் பல லெஜெண்ட்ரி ஆக்டர்ஸ் கூட நடித்திருக்கிறார்.


கன்னடத்தில் லெஜெண்ட்ரி ஆக்டர் ராஜ்குமாருடன் pair பண்ணி நடிச்சாங்க. இப்படி பல படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது கன்னட இண்டஸ்ட்ரியின் சூப்பர் ஸ்டார் அம்புரிஷ் அவர்களை 8ம் திகதி டிசம்பர் மாதம் 1991ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இவங்க 2 பேரும் நடித்த அகுதி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. சில வருடத்தின் முன் கன்னட டிவி சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த சுமலதா தனது காதலை பற்றி கூறியிருந்தார். அதில் அம்ரிஷை ஏன் பிடித்தது என கேட்டதற்கு அவர் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற ஆட்டிடியூட் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் அவர் அப்படி இல்லை. 


அவர் எல்லாரிடமும் தன்னடக்கத்தோடு நடந்துகொள்வார், எப்பவுமே சிரிச்சிட்டு இருப்பார், நல்ல ஒரு மனிதர், எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவார் இவ்வாறான குணங்களால் எனக்கு அவரை பிடிச்சது என்று கூறினார். 


இந்த அழகான ஜோடிக்கு 1993ல் அபிஷேக் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அவரும் இப்போ கன்னட பிலிம் இண்டஸ்ட்ரியில் வெர்க் பண்ணீட்டு இருக்கார். அம்ரிஷ் அவர்கள் 2018ல் நொவெம்பரில் 24ல் இறந்து விட்டார். அவர் இறந்து அடுத்து டிசம்பரில் அவர்களது 27ஆவது திருமண நாள் வந்தது. அன்று சுமலதா தனது கணவருக்காக எமோஷனலாக ஒரு கடிதம் எழுதி இணையத்தில் பகிர்ந்தார்.


சுமலதா ஒரு ஆக்டர் மட்டுமல்ல ப்ரொடியூசரும் கூட அதோடு பொலிட்டீசியனும் ஆவார். இவர் நடிக்கும்போது பல நேஷனல் அவார்ட் வின் பண்ணி இருகாங்க. இவர் 2019ல் பொலிடீஷியனாக இருக்க ஆரம்பித்தார். எந்த கட்சிலையும் இல்லாமல் சுயேட்சையாக நின்றார். 2019ல் லோக் சபா தேர்தலில் கர்நாடகாவில் ஒரு ஸ்டேடில் போட்டியிட்டார்.


கன்னட சூப்பர் ஸ்டாரின் மனைவி என்பதால் இவருக்கு நிறைய மக்களின் வாக்கு கிடைத்தது. மேலும் இவர் பல நடிகர்களுடன் நல்ல உறவை பேனுவதாலும் இவருக்கு மதிப்பு கூடியது. நடிகர்கள் மட்டுமில்லாமல் கட்சியில் இருப்பவர்களும் நல்ல உதவிகளை செய்துள்ளார். போட்டியிட்ட மற்ற எல்லோரையும் விட 128876 வோட்டை பெற்று இருந்தார்.


இதுமட்டுமில்லாமல் இவர் கர்நாடகாவில் பார்லிமென்டிற்கு சென்ற முதல் இண்டிபெண்டெண்ட் பெண் இவர் தான் என்ற பெருமையையும் பெற்றார்.


 

Advertisement

Advertisement