• Dec 26 2024

சூர்யா பேட்டிங், சச்சின் பௌலிங்.. ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் போட்டியின் வீடியோ வைரல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த தொடரில் சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் நடிகர் சூர்யா சென்னை அணியின் உரிமையாளர் ஆனார் என்பதும் இதையடுத்து கொல்கத்தா அணியை சையப் அலிகான் மற்றும் காத்ரீகா கைஃப், ஸ்ரீநகர் அணியை அக்சயகுமார், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷன், மும்பை அணியை அமிதாப் பச்சன், ஹைதராபாத் அணியை ராம்சரண் தேஜா ஆகியோர் வாங்கினர்.


இந்த நிலையில் இன்று இந்த போட்டித்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்கள் மோதிய நட்பு முறையில் ஆட்டம் நடத்தப்பட்டது.

கில்லாடி 11 மற்றும் மாஸ்டர் 11 என இரு அணிகளாக பிரிக்கப்பட்ட இந்த போட்டியில்  மாஸ்டர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சூர்யா பேட்டிங் செய்யும் போது அவருக்கு சச்சின் டெண்டுல்கர் பந்து வீசினார் என்பதும் ரசிகர்கள் இதை பார்த்து கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 நட்பு முறையில் ஆன ஆட்டம் என்றாலும் நடிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டியை சீரியஸ் ஆக விளையாடியதால் இந்த போட்டியை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

Advertisement

Advertisement