• Dec 25 2024

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்களுக்கு தொடரும் சோதனை.. நேற்று ரவீந்தர்.. இன்று தீபக்..?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சச்சனா  வெளியேறியிருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த முறை பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் என்று இரு அணியாக பிரிக்கப்பட்டு டாஸ்குகள் வைக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அணியில் இருந்து ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகி  வெளியே போன நிலையில், தற்போது 8 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் என்ற விகிதத்தில் போட்டியாளர்கள் பயணித்து வருகின்றார்கள்.

ஆண்கள் அணியில் இருக்கும் அனைவரும் ஒன்றாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்குகளை வெற்றிகரமாக முடித்து வருகிறார்கள். ஆனால் பெண்கள் அணி இரண்டாக உடைய அதிக வாய்ப்பு இருப்பதாக காணப்படுகின்றது. அதற்கு காரணம் பெண்கள் அணிக்குள் நடைபெறும் வாக்குவாதம் தான்.


மேலும் பிக் பாஸில் 'நாற்காலி.. யார் நாற்காலி..' என்ற தலைப்பில் வித்தியாசமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில்  விளையாடிய தயாரிப்பாளரும் திரைப்பட விமர்சகருமான ரவீந்தரனுக்கு காலில் அடிபட்டது. இதனால் அவர் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலையில் அவரை தாங்கிக் கொண்டுதான் சக போட்டியாளர்கள் நடக்க வைத்தனர். தற்போது இவரால் தொடர்ந்து போட்டியில் பங்கு பெற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர் எலிமினேட் ஆகி உள்ளதாகவும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், அதே போட்டியில் பங்கு பற்றிய விஜய் டிவியின்  மூத்த தொகுப்பாளர் தீபத்திற்கும் காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது காலில் கட்டுடன் அவரும் பயணித்து வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement